இடுகைகள்

"ஜெய் ஹிந்" எனும் அறிவிப்புக்களோடு இந்திய விமான குழுவினர்.

படம்
இருக்கை பட்டிகளை அணிந்து கொள்ளுங்கள் 'ஜெய் ஹிந்' எனும் அறிவிப்புக்களோடு இந்திய விமான குழுவினர் பயணிகளை வரவேற்கின்றனர். இந்திய தேசிய தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாகிஸ்தானுடனான இராணுவ நிலைப்பாட்டிற்கு பின்னர் இந்தியாவின் தேசிய  விமான சேவையான ஏர் இந்தியா அதன் ஊழியர்களிடம் இந்த சுற்றரிக்கையை அனுப்பியுள்ளது. ஓவ்வொரு அறிவித்தலுக்குப் பின்னும் ஜெய் ஹிந் என்ற அறிவிப்பினை வழங்கும்  நடைமுறை உடனுக்கு அமுலாகவுள்ளதாக விமான சேவையின் தலைமைப் பணிப்பாளர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு  கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த போதிலும் , புதிதாக இணைந்துள்ள ஊழியர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துவதற்காகவே மீண்டும் சுற்றரிக்கை விடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏதிர்வரும் ஏப்பிரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறவுள்ள இந்திய தேர்தலை முன்னிட்டே இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான சேவையில் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த வருடம் 53 நாடுகளில் தேர்தல் நடைபெறுகின்றது.

படம்
முன்னெப்போதும் இல்லாத அளவில்  2019 ஆம் ஆண்டில் அதிகமானோர் வாக்களிக்கவுள்ளனர்.  50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 பில்லியன் மக்கள் இந்த வருடம் தமது தலைவர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.  புhரிய அளவில் தேர்தல் நடைபெறும்> 800 மில்லியன் வாக்களிக்கும் மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான,  இந்தியா உட்பட 187 மில்லியன் வாக்காளர்கள்  பதிவாகியுள்ள இந்தோனேசியா மற்றும் 84 மில்லியன் வாக்காளர்கள் பதிவாகியுள்ள நைஜீரியா போன்ற நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளன.    உலக நாடுகளில் தேர்தல் முறைகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன.  இந்த வருடம் யார் வாக்களின்றார்கள்?   3 பிரதான முறைகளில் நாட்டின் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள்.  ஜனாதிபதித் தேர்தல் :- வாக்காளரினால் நாட்டின் தலைவர் அல்லது ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்.   அரசியல் அதிகாரம் மற்றும் நாட்டின் உத்தியோகபூர்வ பிரதிநிதியாக ஜனாதிபதி உள்ளார்.  நாடாளுமன்றத் தேர்தல் :-  மக்களால் நாடாளுமன்ற உறுப்பினர், தெரிவு செய்யப்பட்ட  பின்னர் நாடாளுமன்றத்தி...

ஆங்கிலம் தெரியாத புஸ்பகுமார

படம்
                    ஒரு செய்தியை வழங்க முடியாத தூதுவராக இருந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவீந்திர  புஸ்பகுமார தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பன்னிரண்டாவது போட்டியாளராக இருந்த காலப்பகுதியில் நான்  கடுமையான ஆழுத்தத்தில் இருந்தேன். சனத் (சனத் ஜயசூரிய) மற்றும் களு (ரொமேஷ் களுவிதாரண) ஆகியோர் அந்த  போட்டியில் விரைவாக ஆட்டமிழந்தனர். அப்போது எம்மிடம் அரவிந்த டி சில்வா மற்றும் அசங்க குருசிங்க ஆடுகளத்தில் துடுப்பாடி வந்தனர். குளிர்பான இடைவேளைக்கு முன்னர் வெளியே சென்ற போது எனக்கு தகவல் ஒன்று கிட்டியது. 'இந்த தகவலை அரவிந்தவிடம் வழங்குங்கள் ' மற்றும் 'சுழல் பந்தை மட்டும் அடியுங்கள் என்ற தகவலை குரு விடம் சொல்லுங்கள்' போன்ற தகவல்களை தெரிவிக்கும்படி ஆடை மாற்றும் அறையிலிருந்த சில என்னிடம் தெரிவித்தனர். பொதுவாக ஆடை மாற்றும் அறையில் உள்ளவர்கள் வழங்கும் பல்வேறு தகவல்களை நான் எடுத்துச் செல்வேன். அதேபோல் படிக்கட்டுக்களில் கீழே இறங்கிய போது தேவ் வட்மோர் அங்கிருந்தார...

மயக்கமும் மர்மமும்

படம்

மனதைக்கவர்ந்த சோரத

படம்
கேளிக்கையான வினோதமான நிகழ்ச்சிகளை காண்பதற்கு இன்று பல தொலைக்காட்சி நாடகங்கள் ,தொடர்கள், நிகழ்ச்சிகள்  நாளாந்தம் வலம்வருகின்றன. இருப்பினும் எதைப் பார்ப்பது எதை தவிர்ப்பது என்பதை தெரிவு செய்வதற்கு கூட நேரம் போதாமல் நேரத்தை ஆக்கரமித்துக்கொண்டு இருக்கின்றது இன்றைய எமது நாளாந்த அட்டவணை. இருந்தபோதும் சமுதாயத்திற்கு பல நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்கிற எண்ணக்கருத்துக்களோடு சில சிந்தனையாளர்கள் தங்கள் ஆக்க பூர்வமான படைப்புக்களையும் கலைத்திறமைகளையு ம்,  வெளிக்கொணர முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கென தனியான  தொலைக்காட்சி நிலையங்கள் இல்லாத  காலகட்டங்களில் அரச தொலைக்காட்சி நிலையங்களினால் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அருமந்தமாக இருந்த தருணங்களும் உண்டு. ஆனால் தற்பொழுது நிலைமைகள் சற்று மாறி  கைவிரல் நுனியில் வேண்டிய தமிழ் தொலைக்காட்சிகளை 24 மணித்தியாலமும் பல தரப்பட்ட தெரிவுகளுடன் கண்டுகளிக்கும் வசதிகள் உண்டு. இது இப்படியிருக்க சிங்கள நாடகங்களினதும் சினிமாக்களினதும் தரம் சற்றும் குறையாமல் மென்மேலும் மெருகேறிக்கொண்டு ப...

ஜுலை கலவரமும் நானும்

படம்
ஜூலை மாதம் வந்தாலே கருப்பு ஜூலையும் வந்துவிடும். ஏற்கனவே வெளியிட்ட பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். பச்சைப்பசேல் விரிப்புடுத்திய அழகிய மலை முகடுகளின் இடையேதான் எங்கள் வீ(கூ)டு இருந்தது. பாலர்பருவ வயதின் நினைவுகளிலும், மனக்கண்களிலும் அதுவோர் விசாலமான வெள்ளித்திரை. இலங்கையின் நாவலப்பிட்டியெனும் நகரத்திலிருந்து உள்ளமைந்த பல்லேகமவெனும் சிற்றூராகும். பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சிறுபான்மைத்துளியாக நாமும் நம்மைப்போல் நாலுபேருமாய் வாழ்ந்துவந்த சம்பவத்தளமது. வழமைக்கு மாறாகவும் இயல்புக்கு வேறாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதற்காய் வெளியே செல்வதைத்தடுத்து வைத்தார் என் அப்பா. ஏன் என்னைத்தடுத்தார் என்பது பின்புதான் என் முத்திய மனசுக்குப்புரிந்தது. பொழுது விடிந்தால் பாலர் பாடசாலையும் மாலை முழுவதும் விளையாட்டும் பின்பு உறக்கமும்தான் என் உலகமாயிருந்தது. அப்போது அப்பாவின் கட்டளையையும் மீறி அயல்வீட்டு பெரும்பான்மையின பெண் நிலாந்தியுடன் விளையாடியதைக்கண்டித்து என்னை உள்ளெ போக உத்தரவிட்டார் என் அப்பா. அப்போ இருள் கவ்வும் மாலை வேளை6.30த் தாண்டியிருக்குமென நினைக்கிறேன். இரவுச்சாப்பாட்டிற்க...

இலங்கை சென்றபோது!

படம்
17 வருடங்களின் பின் நான் படித்து வளர்ந்த யாழ்ப்பாணத்திற்கு சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கும் போய் வரவேண்டும் என்கிற ஆசையும் ஆவலும் என்னைத்தூண்டவே ஆரம்பமானது பயணம். முன்பெல்லாம் யாழ் - கொழும்பு பயணமென்றால் நினைக்கும்போதே வாழ்க்கை வெறுத்துப்போகும் ஒரு தடைகளப்போட்டியாகும்.தரைவழி, கடல்வழி, குண்டுகுழி, சோதனைச்சாவடி, தடுப்புக்காவல், இத்தனைக்கும் மத்தியில் ஒரு சிறிய நாட்டிற்குள்ளேயே பல நாட்கள் பயணிக்கும் கொடுமையான,பயங்கரமான பயணமாகும். பயணித்தவர் போய் சேர்ந்துவிட்டார? அல்லது அங்கிருந்து பயணித்தவர் வந்துவிட்டாரா? என்பதை அறிய முடியாத பின்னடைந்த நிலையில் அன்றைய A9 பாதையும், யாழ்ப்பாணமும். இம்முறை இரவு 10 மணிக்கு கொழும்பில் ஆரம்பித்த பஸ் பயணம் காலை 6 மணிக்கு யாழ் நகரத்தை அடைந்தது எனக்கு ஆச்சர்யத்தைத்தந்தது. நான் பயணித்த அரசு பஸ்சின் சாரதியின் வேகம் எம்மை மேலோகத்திற்கே கொண்டு சேர்த்து விடுவாரோ என்ற அச்சத்தை வரவைத்தது. எதோ அவர்தான் இறுதி யுத்தத்திலே போரிட்டு வெற்றி பெற்றவர் போன்ற இறுமாப்பு. சென்னைத்தமிழில் சொல்வதானால் "தெனாவட்டு". குண்டும், குழியும் நிறை...