"ஜெய் ஹிந்" எனும் அறிவிப்புக்களோடு இந்திய விமான குழுவினர்.










இருக்கை பட்டிகளை அணிந்து கொள்ளுங்கள் 'ஜெய் ஹிந்' எனும் அறிவிப்புக்களோடு இந்திய விமான குழுவினர் பயணிகளை வரவேற்கின்றனர்.

இந்திய தேசிய தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாகிஸ்தானுடனான இராணுவ நிலைப்பாட்டிற்கு பின்னர் இந்தியாவின் தேசிய  விமான சேவையான ஏர் இந்தியா அதன் ஊழியர்களிடம் இந்த சுற்றரிக்கையை அனுப்பியுள்ளது.

ஓவ்வொரு அறிவித்தலுக்குப் பின்னும் ஜெய் ஹிந் என்ற அறிவிப்பினை வழங்கும்  நடைமுறை உடனுக்கு அமுலாகவுள்ளதாக விமான சேவையின் தலைமைப் பணிப்பாளர் கடந்த திங்கட்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவு  கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்த போதிலும் , புதிதாக இணைந்துள்ள ஊழியர்களுக்கு அதனை ஞாபகப்படுத்துவதற்காகவே மீண்டும் சுற்றரிக்கை விடப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா விமான சேவையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் ஏப்பிரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறவுள்ள இந்திய தேர்தலை முன்னிட்டே இந்த நடைமுறை ஏர் இந்தியா விமான சேவையில் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜுலை கலவரமும் நானும்

இலங்கை சென்றபோது!

இலங்கைக்கு கிடைத்த பரிசு