வியாழன், 16 செப்டம்பர், 2010

முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள்!


முன்பெல்லாம் புத்தகங்களை வாசிப்ப்தில் எனது பொழுதுகள் கழியும். ஆனால் இப்போதெல்லாம் முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள் மூழ்கிக்கிடக்கின்றது.  Face book த்தான் முகப்புத்தகமென்று குறிப்பிட்டேன். Facebook ற்க்கு தமிழாக்கத்தை கொடுத்த பெருமையும்,உரிமையும் எனக்குத்தான் என்பதில் ஒரு பெருமிதம். இதனை நண்பர் கோமஸ் அண்ணா ஆமோதிக்கின்றார். இந்த புத்தகத்திற்குள் எப்போது நான் மூழ்கினேன் என்பது எனக்கே தெரியாது. இதைக்குறித்து பதிவு எழுதவேண்டுமென்று நினைத்திருந்த போதே நினைத்த பல காரியங்களை பதிவர் சினேகிதி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது எனக்கு மட்டுமல்ல பலரது பொழுதுகள் Facebook ஆரம்பித்துFacebook இல் தான் முடிகிறது என்று குறிப்பிடுகிறார்கள்.

உண்மையில் இன்றைய காலக்கட்டத்தில் பல சமூகத்தொடர்பு தளங்கள் உலாவந்தாலும் முகப்புத்தகம் அதன் வாசகர்களிடத்தில் நல்ல பெயறெடுத்துள்ளது எனலாம். வெறுமனே நம்முடைய படங்களை வெளியிட்டு நண்பர்களின் ஆல்பத்தையும் பார்வையிடுவதற்குமட்டுமல்லாது,எங்கோவிருக்கும் நம் பால்ய சினேகிதர்களை ஒருங்கிணைக்கும் அற்புத தளமாக செயல்படுகிறது.


. Facebook இன் வரலாற்றினை பார்ப்போமேயானால் Mark Zuckeburd எனும் 25 வயது Harvard பல்கலைக்கழக மாணவன் 2004ம் ஆண்டு மாசி 4ம் திகதி ஒரு செயற்பாட்டிற்காக சக மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கிய தளமேFacebook எனும் சமூகத்தொடர்பாடல் வலையமைப்பாகும். சினேகிதி குறிப்பிட்ட்தைப்போல இதில் கோழி வளர்ப்பதும், கத்தரிக்காய் நடுவதும்,பரிசுப்பொருள்கள் தருவதும் எரிச்சலூட்டும் விசயங்களும் அகற்றப்படவேண்டிய விசயங்களுமாகும்.

நான் இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறேன்,எங்கெல்லாம் போய் வந்தேன் என்பதை உடனுக்குடன் எனது டிஜிடல் கமராவிலோ,கைத்தொலைபேசியின் வாயிலாக சுட்டுத்தள்ளியதை அப்ப்ப்போ சுடச் சுட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.தொடர்பு முறிந்துபோன எமது நண்பர்களை இந்த தளத்தில் தேடிக்கண்டுபிடிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களின் எண்னிக்கையை அத்திகரிப்பதிலேயேசந்தோசப்படுகிறார்கள். ஒரு சில நாடுகளில் இதன் சேவை தடைசெய்யப்பட்டும், பல சிக்கல்கள்,சர்ச்சைகளைச்சந்தித்தாலும் 350 மில்லியன் பாவனையாளர்களைத்தன்னுள் கொண்டுள்ளது.
எப்படி உருவானது என்பதினை சித்தரிக்கும் வண்ணமாக Harvard எனும் திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ஈச்சம் பழம்!

வெயிலின் கொடுமை தாங்கமுடியவில்லை! வேலைப்பளுவும் சொல்ல முடியவில்லை! இவற்றைக்காரணம் காட்டி கடந்த ஏப்பிரல் மாதத்திற்குப்பின் எந்த பதிவும் இடவில்லை. மீண்டும் ஒரு மொக்கைப்ப்திவை உங்களிடம் ஒப்புவிக்கிறேன். இவற்றுக்கிடையில் ஜூலைக்கலவரமும் நானும்” எனும் பதிவை மீள்பதிவேற்றினேன்.


சரி விசயத்திற்கு வருவோம். இந்த பேரீச்சம் பழம் இருக்கிறதே பேரீச்சம் பழம், இது உடலுக்கு நல்லதா என்றால் மிகவும் நல்லது. ரொம்ப பேர் கூடாது என்கிறார்கள்.இப்படி வலம்புரி ஜானைப்போல பேச வரல்லைங்க. பேரீச்சம் மரம் எப்படி இருக்கும்? எப்படி பூக்கும்,காய்க்கும்,பழுக்கும் என்பது அமீரகத்திற்கு வந்த பின்புதான் காணும் வாய்ப்புகிடைத்தது
ஈச்சம் பழம்!

எங்கள் குடியிருப்பிற்கு பின்புரமாக ஒரு சிறிய மரம் இருந்தது அது கொத்தாக காய்த்திருக்கும் அழகே தனியழகு. என் கமராவில் கிளிக் செய்த அந்த படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

டுபாயில் ஹலோ எஃப்.எம்தமிழ்நாட்டில் ஊடகத்துறையில் முன்நிற்கும் நிருவனமான மலர் பப்ளிகேசன் நிருவனத்தின் சார்பில் பல வானொலி நிலையங்கள் இயங்கிவருகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல முக்கிய நகரங்களான சென்னை,மதுரை,திருநெல்வேலி,தூத்துக்குடி,கோயம்புத்தூர்,பாண்டிச்சேரி மற்றும் திருச்சி போன்ற நகரங்களில் ஹலோ எஃப்.எம் ஒலித்துவருகின்றது.

பல்வேறு தமிழ் பண்பலை வானொலிகளின் வரிசையில் ஹலோ எஃப்.எம் தனெக்கென நேயர்களிடத்தில் ஒரு தனியிடத்தைப்பிடித்துள்ளது.

பத்திரிகைத்துறையிலும்,வானொலித்துறையிலும் வெற்றிக்கொடிகட்டிய மலர் பப்ளிகேஷன் நிருவனம் டுபாயிலும் தனது காலடியை எடுத்து வைக்கிறது.

24 மணிநேர தமிழ் வானொலி சேவை துவங்கப்படவுள்ளது என்பது தமிழ் வானொலி நேயர் நெஞ்சங்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

அமீரகத்தில் ஏற்கனவே ரேடியோ ஏசியா நிருவனத்துடன் இணைந்து இலங்கை மகாராஜா நிருவனம் சக்தி எப்.எம் வானொலியை நடாத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி எப்.எம் அண்மையில் தனது சேவையினை ஏ. எம் அலை வரிசைக்கு மாற்றிக்கொண்டது.

இந்நிலையில் பண்பலையில் ஹலோ எஃப்.எம் மின் வரவினால் அமீரகத்தில் இரண்டு வானொலிகள் போட்டி போடக்கூடிய ஆரோக்கியமான வாய்ப்பிருப்பதாக வானொலி அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஹலோ எஃப்.எம் மின் பரீட்சாத்த ஒலிபரப்பு இவ்வருடம் ஜனவரி 14 முதல் பண்பலை 89.5 அலை வரிசைல்யில் புஜைராவில் இருந்து ஒலிபரப்பாகிவருகின்றது.

கூடிய விரைவில் பல்சுவை நிகழ்ச்சிகளுடன் இதன் சேவை அமீரகமெங்கும் ஒலிக்கவிருக்கின்றது.

வெள்ளி, 15 ஜனவரி, 2010

பழசிராஜா

அண்மையில் ஓர் மலையாள படத்தினைப்போய்ப் பார்க்கும் படியாக மலையாள நண்பர்கள் என்னை வற்புறுத்தினார்கள். அமீரகத்தில் சக்கைபோடு போடுபோட்டுக்கொண்டிருக்கும் பழசிராஜா படத்தினைதான் அவர்கள் குறிப்பிட்டது.
பிரபல மலையாள இயக்குனர் ஹரிஹரனின் இயக்கத்திலும், வாசுதேவன் நாயரின் திரைக்கதை வசனத்திலும், இசைஞானி இளையராஜாவின் இசையிலும் அலங்கரிக்கப்பட்ட ஓர் அற்புதமான படமாகும். பிரபல நடிகர் மம்முட்டி, சரத்குமார்,பத்மபிரியா போன்றோர் இதில் நடித்திருக்கிறார்கள். அமீரகத்திரை அரங்கொன்றில் நானும் படத்தினைக்காண சென்றிருந்தேன்.
படத்தின் பிரமாண்டமான காட்சிகள் நகர நகர ஒரு புரட்சியின் உத்வேகத்தை கதையும், காட்சியமைப்பும் தந்துகொண்டிருந்தது. வெள்ளையனுக்கு எதிராக கேரளத்தில் போராடிய பழசிராஜா எனும் வீரனது கதையாகும்.


படம் கேரளத்தில் நடந்த ஓர் சம்பவத்தை சித்தரித்தாலும் எனக்கென்னவோ ஈழத்தில் நடந்த ஓர் இலட்சியப்போராட்டத்தையே என் கண்முன் நிருத்திநிற்கின்றது. புரட்சியையும்,விடுதலையையும் நேசிக்கும் எந்தவொரு மகனுக்கும் இப்படத்தைப்பார்க்கும்போது இரத்தம் சூடாகும்.ஒரு சிறுபான்மையினம் தன் இனத்தைக்காத்துக்கொள்ளவும், அதன் விடுதலைக்காக போராடியபோதும் பெரும்பான்மை சதிக்காரர்களின் நயவஞ்சகத்தன்மையே படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இப்படட்த்தின் தமிழ் உரிமையைப்பெற்று இசைஞானி இளையராஜா
படத்தை தமிழில் வெளியிட்டாலும் தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லையென்றே சொல்லலாம்.
படத்தில் இளையராஜாவின் இசை பாடல்களிலும், பின்ணனியிலும் கம்பீரமாக ஒலிக்கிறது.
படத்தைப்பார்த்துவிட்டு வெளியேறும்போது ஈழத்தில் நடந்த ஒரு சம்பவத்தையே எனக்கு நினைவுபடுத்தியது.