ஆங்கிலம் தெரியாத புஸ்பகுமார

















                   
ஒரு செய்தியை வழங்க முடியாத தூதுவராக இருந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவீந்திர  புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பன்னிரண்டாவது போட்டியாளராக இருந்த காலப்பகுதியில் நான்  கடுமையான ஆழுத்தத்தில் இருந்தேன். சனத் (சனத் ஜயசூரிய) மற்றும் களு (ரொமேஷ் களுவிதாரண) ஆகியோர் அந்த  போட்டியில் விரைவாக ஆட்டமிழந்தனர்.
அப்போது எம்மிடம் அரவிந்த டி சில்வா மற்றும் அசங்க குருசிங்க ஆடுகளத்தில் துடுப்பாடி வந்தனர்.

குளிர்பான இடைவேளைக்கு முன்னர் வெளியே சென்ற போது எனக்கு தகவல் ஒன்று கிட்டியது. 'இந்த தகவலை அரவிந்தவிடம் வழங்குங்கள் ' மற்றும் 'சுழல் பந்தை மட்டும் அடியுங்கள் என்ற தகவலை குரு விடம் சொல்லுங்கள்' போன்ற தகவல்களை தெரிவிக்கும்படி ஆடை மாற்றும் அறையிலிருந்த சில என்னிடம் தெரிவித்தனர்.

பொதுவாக ஆடை மாற்றும் அறையில் உள்ளவர்கள் வழங்கும் பல்வேறு தகவல்களை நான் எடுத்துச் செல்வேன். அதேபோல் படிக்கட்டுக்களில் கீழே இறங்கிய போது தேவ் வட்மோர் அங்கிருந்தார்.

ஒரு தகவலை தெரிவிப்பதற்காக அவர் என்னிடம் பேசினார். அன்று எனக்கு ஆங்கில அறிவு குறைவாக காணப்பட்டதனால் அவர் சொன்ன தகவல் என்னவெற்று புரியாமலேயே 'ஓகே டாவி' என தெரிவித்து விட்டு  ஆடுகளத்திற்கு ஓடினேன்.

அரவிந்த மற்றும் குருவை கண்டவுடன் முற்றாக ஸ்தம்பித்து விட்டேன். மன அழுத்தத்துடன் இருந்த நான் சொல்ல வந்த செய்தியை நினைவுப் படுத்த  முடியாதவனாய் 'நன்றாக விளையாடினீர்கள் அண்ணா, அப்படியே செல்லுங்கள் ' என சொல்லிவிட்டு திரும்பி வந்துவிட்டேன்.
ஆடை மாற்றும் அறைக்கு வந்த போது சிலர் என்னிடம் ' புஷி நீ அதை சொன்னாயா?' நான் ' ஆமாம் என்றேன்.

பின்னர் டாவ் என்னிடம் வந்து ஏதோ கேட்டார் ஆனால் அது எனக்கு அது புரியவில்லை. அந்த தகவலை சொன்னாயா என்றுதான் கேட்கிறார் என நினைத்து  ஆங்கிலத்தில் 'யெஸ்  ஐ டோல்ட் '

அந்த தகவலை நான் சொல்லியிருப்பேன் மற்றயவர்கள் எல்லோறும் நம்பியிருந்த போதும் டாவ் என்னை சந்தேகமாகவே பார்த்தார்.

மிகவும் பரபரப்பான அந்த முழு சம்பவங்களும் என்னால் மறக்க முடியாத அனுபவங்கள்.

உலகக்கிண்ணத்தை அன்று வெற்றிருந்த போதும் என்னால் ஒரு தகவலை தெரிவிக்க முடியாதவனாய் இருந்ததை எப்போதும் நினைத்துப் பார்பதுண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஈச்சம் பழம்!

இலங்கைக்கு கிடைத்த பரிசு

ஜுலை கலவரமும் நானும்