இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டுபாயில் chikkupukku

படம்
டுபாய்வாழ் மக்களுக்கோர் அரியசெய்தி! அதாவது டுபாய் RTA (Roads and Transport Authority) உலகின் மிகப்பெரிய தானியங்கும் ரயில் சேவையினை நகரத்தின் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களினால் Dubai Metro Cityயில் ஆரம்பித்துள்ளது. 30,000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டும், 15.3 பில்லியன் அமீரக திரஹம் செலவினாலும் நிர்மானிக்கப்பட்ட இதன் பணிகள் நான்கு வருடகாலத்திற்குள் கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.. ஏற்கெனவே இதன் வெள்ளோட்டம் ஜெபல் அலி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக ஓடவிடப்பட்டுள்ளது.அதிநவீன தொழில்னுட்பத்தினால் இயங்கும் இந்த ரயில் சேவை டுபாய் நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக்குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தமாக 79 ரயில்கள் இரண்டு வரிசைகளில்(Tracks) ஓடவிருக்கின்றன. சிகப்பு வரிசையில் 52.1 KM தூரத்திற்கு 62 ரயில்களும், பச்சை வரிசையில் 22.5KM தூரத்திற்கு 17 ரயில்களும் சேவையில் இயங்கும்.ஒவ்வொரு ரயிலிலும் Golden Class,Silver Class,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குமாக 3 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இருக்கைகளும்,நின்றவண்ணம் பயணிகும் பயணிகளுக்காக பாதுகாப்பான கைப்ப்டிக

இலங்கைக்கு கிடைத்த பரிசு

படம்
இலங்கைக்கு 2.6 பில்லியன கடன். இனப்படுகொலைக்கு கிடைத்த பரிசு! தமிழினத்தை ஒட்டுமொத்தமாக அழித்து அதன் மூலம் அவர்களின் நியாயமான அரசியல் போராட்டத்தை திட்டமிட்டு அழித்தொழிக்க மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை‌க்காக தனது நிதி வலிமையை பெருமளவிற்கு செலவிட்டதால் நிதி நெருக்கடிக்கு ஆளான சிறிலங்க அரசி்ற்கு 2.6 பில்லியன் டாலர் கடன் கொடுத்து தூக்கி நிறுத்தியுள்ளது பன்னாட்டு நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்.).அயல் நாடுகளில் இருந்தும், தமிழினத்தை கங்கணம் கட்டிக் கொண்டு அழித்தொழிப்பது நன்றாகத் தெரிந்தும் கண்ணை மூடிக்கொண்டு 'சிறிலங்க மக்களின் புனர்வாழ்விற்கு' உதவிய கொடை நாடுகளிடமிருந்தும் வாங்கிக் குவித்த நிதியணைத்தையும் இராணுவத்திற்கும், தமிழர்கள் மீதான போரிற்கும் செலவிட்டுவிட்டு, அந்தப் போரில் தங்கள் உயிரை ஈந்த பல ஆயிரக் கணக்கான சிங்கள சிப்பாய்களுக்கு இழப்பீடும், ஓய்வூதியமும் தரவேண்டும் என்பதற்காக, இறந்த சிப்பாய்களின் கணக்கை காட்டாமல் அவர்களை ‘காணாமல் போனவர்களின் பட்டியலில்’ இன்று வரை வைத்திருந்து, கொல்லப்பட்ட சிப்பாய்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டும் இராஜ தந்திரத்தில் ஈடுபட்டுவரும் சிறிலங்க அரசு, இதற்க

சினிமாவில் பாடும் வாய்ப்பு!

படம்
இங்கே அழுத்திப்பாருங்கள் http://www.youtube.com/watch?v=rDWPZudu8u4 எனது உயர்படிப்பிற்காகவும்,சித்தப்பாவின் தொழில் உதவிக்காகவும் சென்னையில் 5வருடங்கள் தங்கியிருந்தபோது ஒரு தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்புகிட்டியது. அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.சிறுவயதுமுதல் இசையில் இருந்த ஆர்வத்தினாலும், ஒரளவேனும் கேள்விஞானத்தினால் பாடும் திறமையிருந்ததினாலும் என் தாயார் முதல் பலரும் கிடார் பயிலும்படி ஊக்கப்படுத்தினார்கள். என் தாயார் வாங்கித்தந்த கிடார் என்னைவிட அளவில் பெரிதாகவிருந்தமையால் அதன் மீது வெறுப்புவந்து அப்படியே விட்டுவிட்டேன். இளமைக்காலத்தில் மீண்டும் கிடார் மீது மோகம் வந்துவிடவே கொஞ்சம் சிரத்தையாகக்கற்றுக்கொள்ள முடிவுசெய்தேன். அப்போது சென்னை அசோக்நகரில் திரு.கண்ணன் மாஸ்டர் நடாத்திவந்த இசைக்கல்லூரியில் போய்ச்சேர்ந்துகொண்டேன். சீக்கிரம் கற்றுக்கொள்வதற்காய் குறுக்குவழிமுறையை தேர்வு செய்து பயின்று வந்தேன்.அப்போதுதான் எனக்கு அறிமுகமானார் கண்ணன் மாஸ்டரின் ஆரம்பகால மாணவனும், இசையமைப்பாளருமாகிய அக்னி கலைவாணி எனும் துடிப்புள்ள இளைஞரை. அவ்வப்போது பொழுது போக்கிற்காய் சில இசைக்க