இடுகைகள்
மனதைக்கவர்ந்த சோரத
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கேளிக்கையான வினோதமான நிகழ்ச்சிகளை காண்பதற்கு இன்று பல தொலைக்காட்சி நாடகங்கள் ,தொடர்கள், நிகழ்ச்சிகள் நாளாந்தம் வலம்வருகின்றன. இருப்பினும் எதைப் பார்ப்பது எதை தவிர்ப்பது என்பதை தெரிவு செய்வதற்கு கூட நேரம் போதாமல் நேரத்தை ஆக்கரமித்துக்கொண்டு இருக்கின்றது இன்றைய எமது நாளாந்த அட்டவணை. இருந்தபோதும் சமுதாயத்திற்கு பல நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்கிற எண்ணக்கருத்துக்களோடு சில சிந்தனையாளர்கள் தங்கள் ஆக்க பூர்வமான படைப்புக்களையும் கலைத்திறமைகளையு ம், வெளிக்கொணர முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கென தனியான தொலைக்காட்சி நிலையங்கள் இல்லாத காலகட்டங்களில் அரச தொலைக்காட்சி நிலையங்களினால் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அருமந்தமாக இருந்த தருணங்களும் உண்டு. ஆனால் தற்பொழுது நிலைமைகள் சற்று மாறி கைவிரல் நுனியில் வேண்டிய தமிழ் தொலைக்காட்சிகளை 24 மணித்தியாலமும் பல தரப்பட்ட தெரிவுகளுடன் கண்டுகளிக்கும் வசதிகள் உண்டு. இது இப்படியிருக்க சிங்கள நாடகங்களினதும் சினிமாக்களினதும் தரம் சற்றும் குறையாமல் மென்மேலும் மெருகேறிக்கொண்டு ப...
ஜுலை கலவரமும் நானும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜூலை மாதம் வந்தாலே கருப்பு ஜூலையும் வந்துவிடும். ஏற்கனவே வெளியிட்ட பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். பச்சைப்பசேல் விரிப்புடுத்திய அழகிய மலை முகடுகளின் இடையேதான் எங்கள் வீ(கூ)டு இருந்தது. பாலர்பருவ வயதின் நினைவுகளிலும், மனக்கண்களிலும் அதுவோர் விசாலமான வெள்ளித்திரை. இலங்கையின் நாவலப்பிட்டியெனும் நகரத்திலிருந்து உள்ளமைந்த பல்லேகமவெனும் சிற்றூராகும். பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சிறுபான்மைத்துளியாக நாமும் நம்மைப்போல் நாலுபேருமாய் வாழ்ந்துவந்த சம்பவத்தளமது. வழமைக்கு மாறாகவும் இயல்புக்கு வேறாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதற்காய் வெளியே செல்வதைத்தடுத்து வைத்தார் என் அப்பா. ஏன் என்னைத்தடுத்தார் என்பது பின்புதான் என் முத்திய மனசுக்குப்புரிந்தது. பொழுது விடிந்தால் பாலர் பாடசாலையும் மாலை முழுவதும் விளையாட்டும் பின்பு உறக்கமும்தான் என் உலகமாயிருந்தது. அப்போது அப்பாவின் கட்டளையையும் மீறி அயல்வீட்டு பெரும்பான்மையின பெண் நிலாந்தியுடன் விளையாடியதைக்கண்டித்து என்னை உள்ளெ போக உத்தரவிட்டார் என் அப்பா. அப்போ இருள் கவ்வும் மாலை வேளை6.30த் தாண்டியிருக்குமென நினைக்கிறேன். இரவுச்சாப்பாட்டிற்க...
இலங்கை சென்றபோது!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
17 வருடங்களின் பின் நான் படித்து வளர்ந்த யாழ்ப்பாணத்திற்கு சென்றுவர வாய்ப்பு கிடைத்தது. விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கும் போய் வரவேண்டும் என்கிற ஆசையும் ஆவலும் என்னைத்தூண்டவே ஆரம்பமானது பயணம். முன்பெல்லாம் யாழ் - கொழும்பு பயணமென்றால் நினைக்கும்போதே வாழ்க்கை வெறுத்துப்போகும் ஒரு தடைகளப்போட்டியாகும்.தரைவழி, கடல்வழி, குண்டுகுழி, சோதனைச்சாவடி, தடுப்புக்காவல், இத்தனைக்கும் மத்தியில் ஒரு சிறிய நாட்டிற்குள்ளேயே பல நாட்கள் பயணிக்கும் கொடுமையான,பயங்கரமான பயணமாகும். பயணித்தவர் போய் சேர்ந்துவிட்டார? அல்லது அங்கிருந்து பயணித்தவர் வந்துவிட்டாரா? என்பதை அறிய முடியாத பின்னடைந்த நிலையில் அன்றைய A9 பாதையும், யாழ்ப்பாணமும். இம்முறை இரவு 10 மணிக்கு கொழும்பில் ஆரம்பித்த பஸ் பயணம் காலை 6 மணிக்கு யாழ் நகரத்தை அடைந்தது எனக்கு ஆச்சர்யத்தைத்தந்தது. நான் பயணித்த அரசு பஸ்சின் சாரதியின் வேகம் எம்மை மேலோகத்திற்கே கொண்டு சேர்த்து விடுவாரோ என்ற அச்சத்தை வரவைத்தது. எதோ அவர்தான் இறுதி யுத்தத்திலே போரிட்டு வெற்றி பெற்றவர் போன்ற இறுமாப்பு. சென்னைத்தமிழில் சொல்வதானால் "தெனாவட்டு". குண்டும், குழியும் நிறை...
“ஜே வானொலி”
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
http://jeyfm.com/ நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமும் , அதன் தேவையும் அதிகரித்து கொண்டுவருகையில் ஊடகத்துறையும் அதனை சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதற்கு குறிப்பாக இணையதள வானொலிகளை தக்க உதாரணமாகச்சொல்லலாம். மக்களிடையே இணையத்தின் பாவணை அதிகரித்து வருவதால் இணைய வானொலிகளின் வருகையும் அதிகரித்து வருகின்றது எனலாம். இணையத்தை உபயோகித்தபடியே வானொலியையும் கேட்பதற்கான வாய்ப்பு இதிலிருப்பது வசதியான வாய்ப்பாகும். அந்த வகையில் புதிய பரிமாணத்தொடும் , புதிய தொழில்நுட்பவசதிகளைக்கொண்டும் பரிட்ச்சாத்த ஒலிபரப்பிலேயே பல நேயர்களை தன்னகத்தே கொண்டு வந்துள்ளது "ஜே இணையதள வானொலி". http://jey...
ஜூலை கலவரமும் நானும்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜூலை மாதம் வந்தாலே கருப்பு ஜூலையும் வந்துவிடும். ஏற்கனவே வெளியிட்ட பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். பச்சைப்பசேல் விரிப்புடுத்திய அழகிய மலை முகடுகளின் இடையேதான் எங்கள் வீ(கூ)டு இருந்தது. பாலர்பருவ வயதின் நினைவுகளிலும், மனக்கண்களிலும் அதுவோர் விசாலமான வெள்ளித்திரை. இலங்கையின் நாவலப்பிட்டியெனும் நகரத்திலிருந்து உள்ளமைந்த பல்லேகமவெனும் சிற்றூராகும். பெரும்பாலும் பெரும்பான்மையினத்தவர் மத்தியில் சிறுபான்மைத்துளியாக நாமும் நம்மைப்போல் நாலுபேருமாய் வாழ்ந்துவந்த சம்பவத்தளமது. வழமைக்கு மாறாகவும் இயல்புக்கு வேறாகவும் மாலை நேரத்தில் விளையாடுவதற்காய் வெளியே செல்வதைத்தடுத்து வைத்தார் என் அப்பா. ஏன் என்னைத்தடுத்தார் என்பது பின்புதான் என் முத்திய மனசுக்குப்புரிந்தது. பொழுது விடிந்தால் பாலர் பாடசாலையும் மாலை முழுவதும் விளையாட்டும் பின்பு உறக்கமும்தான் என் உலகமாயிருந்தது. அப்போது அப்பாவின் கட்டளையையும் மீறி அயல்வீட்டு பெரும்பான்மையின பெண் நிலாந்தியுடன் விளையாடியதைக்கண்டித்து என்னை உள்ளெ போக உத்தரவிட்டார் என் அப்பா. அப்போ இருள் கவ்வும் மாலை வேளை6.30த் தாண்டியிருக்குமென நினைக்கிறேன். ...
முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
முன்பெல்லாம் புத்தகங்களை வாசிப்ப்தில் எனது பொழுதுகள் கழியும். ஆனால் இப்போதெல்லாம் முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள் மூழ்கிக்கிடக்கின்றது. Face book த்தான் முகப்புத்தகமென்று குறிப்பிட்டேன். Facebook ற்க்கு தமிழாக்கத்தை கொடுத்த பெருமையும்,உரிமையும் எனக்குத்தான் என்பதில் ஒரு பெருமிதம். இதனை நண்பர் கோமஸ் அண்ணா ஆமோதிக்கின்றார். இந்த புத்தகத்திற்குள் எப்போது நான் மூழ்கினேன் என்பது எனக்கே தெரியாது. இதைக்குறித்து பதிவு எழுதவேண்டுமென்று நினைத்திருந்த போதே நினைத்த பல காரியங்களை பதிவர் சினேகிதி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது எனக்கு மட்டுமல்ல பலரது பொழுதுகள் Facebook ஆரம்பித்துFacebook இல் தான் முடிகிறது என்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இன்றைய காலக்கட்டத்தில் பல சமூகத்தொடர்பு தளங்கள் உலாவந்தாலும் முகப்புத்தகம் அதன் வாசகர்களிடத்தில் நல்ல பெயறெடுத்துள்ளது எனலாம். வெறுமனே நம்முடைய படங்களை வெளியிட்டு நண்பர்களின் ஆல்பத்தையும் பார்வையிடுவதற்குமட்டுமல்லாது,எங்கோவிருக்கும் நம் பால்ய சினேகிதர்களை ஒருங்கிணைக்கும் அற்புத தளமாக செயல்படுகிறது . . Facebook இன் வரலாற்றினை பார்ப்போமேயானா...