“ஜே வானொலி”
http://jeyfm.com/
http://jeyfm.com/
நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமும், அதன் தேவையும் அதிகரித்து கொண்டுவருகையில் ஊடகத்துறையும் அதனை சாதகமாக பயன்படுத்தி வருகின்றது என்பதற்கு குறிப்பாக இணையதள வானொலிகளை தக்க உதாரணமாகச்சொல்லலாம். மக்களிடையே இணையத்தின் பாவணை அதிகரித்து வருவதால் இணைய வானொலிகளின் வருகையும் அதிகரித்து வருகின்றது எனலாம்.
இணையத்தை உபயோகித்தபடியே வானொலியையும் கேட்பதற்கான வாய்ப்பு இதிலிருப்பது வசதியான வாய்ப்பாகும்.அந்த வகையில் புதிய பரிமாணத்தொடும், புதிய தொழில்நுட்பவசதிகளைக்கொண்டும் பரிட்ச்சாத்த ஒலிபரப்பிலேயே பல நேயர்களை தன்னகத்தே கொண்டு வந்துள்ளது "ஜே இணையதள வானொலி".http://jeyfm.com/ இதன் சேவை மற்றைய இணையதள வானொலிகளிளிருந்து முற்றிலும் வேறுபட்டு நிகழ்ச்சிகளின் தரத்திலும், ஒலிநயத்திலும் சிறப்பாக இருக்கின்றது.
ஜே வானொலியைகுறித்து அதன் முகாமையாளர் கூறுகையில், நிகழ்ச்சிகள் இந்தியா,இலங்கை மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில்லிருந்தும் மூத்த அறிவிப்பாளர்கள் முதல் இளம் அறிவிப்பாளர்கள்வரை அறுசுவை நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கவிருப்பது வானொலித்துறையில் புதிய முயற்சியாகும் என்றும், பெரியவர் முதல் இளவயதினர் வரை கேட்டு மகிழக்கூடிய நிகழ்ச்சிகள் ஒலிபரப்புசெய்யவிருப்பதால் நல்ல வரவேற்பை பெரும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜே வானொலியை இணையவசதியுள்ள கணனிகளில் மட்டுமின்றி ஐ போன்களிலும் துல்லியமான ஒலிநயத்துடன் கேட்டு மகிழும் வாய்ப்பு கூடுதல் வசதியாகும்.
வானொலித்துறையில் புதிய புரட்சி படைக்கவிருக்கும் ஜே வானொலியின் வரவு நேயர்களுக்கு இனிப்பான செய்தியாகும். மிக விரைவில் எதிர்பார்ப்போம் ஜே வானொலியை. http://jeyfm.com/
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்