பழசிராஜா
அண்மையில் ஓர் மலையாள படத்தினைப்போய்ப் பார்க்கும் படியாக மலையாள நண்பர்கள் என்னை வற்புறுத்தினார்கள். அமீரகத்தில் சக்கைபோடு போடுபோட்டுக்கொண்டிருக்கும் பழசிராஜா படத்தினைதான் அவர்கள் குறிப்பிட்டது.
பிரபல மலையாள இயக்குனர் ஹரிஹரனின் இயக்கத்திலும், வாசுதேவன் நாயரின் திரைக்கதை வசனத்திலும், இசைஞானி இளையராஜாவின் இசையிலும் அலங்கரிக்கப்பட்ட ஓர் அற்புதமான படமாகும். பிரபல நடிகர் மம்முட்டி, சரத்குமார்,பத்மபிரியா போன்றோர் இதில் நடித்திருக்கிறார்கள். அமீரகத்திரை அரங்கொன்றில் நானும் படத்தினைக்காண சென்றிருந்தேன்.

படத்தின் பிரமாண்டமான காட்சிகள் நகர நகர ஒரு புரட்சியின் உத்வேகத்தை கதையும், காட்சியமைப்பும் தந்துகொண்டிருந்தது. வெள்ளையனுக்கு எதிராக கேரளத்தில் போராடிய பழசிராஜா எனும் வீரனது கதையாகும்.
படம் கேரளத்தில் நடந்த ஓர் சம்பவத்தை சித்தரித்தாலும் எனக்கென்னவோ ஈழத்தில் நடந்த ஓர் இலட்சியப்போராட்டத்தையே என் கண்முன் நிருத்திநிற்கின்றது. புரட்சியையும்,விடுதலையையும் நேசிக்கும் எந்தவொரு மகனுக்கும் இப்படத்தைப்பார்க்கும்போது இரத்தம் சூடாகும்.
ஒரு சிறுபான்மையினம் தன் இனத்தைக்காத்துக்கொள்ளவும், அதன் விடுதலைக்காக போராடியபோதும் பெரும்பான்மை சதிக்காரர்களின் நயவஞ்சகத்தன்மையே படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இப்படட்த்தின் தமிழ் உரிமையைப்பெற்று இசைஞானி இளையராஜா
படத்தை தமிழில் வெளியிட்டாலும் தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லையென்றே சொல்லலாம்.
படத்தை தமிழில் வெளியிட்டாலும் தமிழ் ரசிகர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லையென்றே சொல்லலாம்.
படத்தில் இளையராஜாவின் இசை பாடல்களிலும், பின்ணனியிலும் கம்பீரமாக ஒலிக்கிறது.
படத்தைப்பார்த்துவிட்டு வெளியேறும்போது ஈழத்தில் நடந்த ஒரு சம்பவத்தையே எனக்கு நினைவுபடுத்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்