ஆங்கிலம் தெரியாத புஸ்பகுமார

ஒரு செய்தியை வழங்க முடியாத தூதுவராக இருந்துள்ளேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவீந்திர புஸ்பகுமார தெரிவித்துள்ளார். 1996 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பன்னிரண்டாவது போட்டியாளராக இருந்த காலப்பகுதியில் நான் கடுமையான ஆழுத்தத்தில் இருந்தேன். சனத் (சனத் ஜயசூரிய) மற்றும் களு (ரொமேஷ் களுவிதாரண) ஆகியோர் அந்த போட்டியில் விரைவாக ஆட்டமிழந்தனர். அப்போது எம்மிடம் அரவிந்த டி சில்வா மற்றும் அசங்க குருசிங்க ஆடுகளத்தில் துடுப்பாடி வந்தனர். குளிர்பான இடைவேளைக்கு முன்னர் வெளியே சென்ற போது எனக்கு தகவல் ஒன்று கிட்டியது. 'இந்த தகவலை அரவிந்தவிடம் வழங்குங்கள் ' மற்றும் 'சுழல் பந்தை மட்டும் அடியுங்கள் என்ற தகவலை குரு விடம் சொல்லுங்கள்' போன்ற தகவல்களை தெரிவிக்கும்படி ஆடை மாற்றும் அறையிலிருந்த சில என்னிடம் தெரிவித்தனர். பொதுவாக ஆடை மாற்றும் அறையில் உள்ளவர்கள் வழங்கும் பல்வேறு தகவல்களை நான் எடுத்துச் செல்வேன். அதேபோல் படிக்கட்டுக்களில் கீழே இறங்கிய போது தேவ் வட்மோர் அங்கிருந்தார...