டுபாயில் chikkupukku

டுபாய்வாழ் மக்களுக்கோர் அரியசெய்தி! அதாவது டுபாய் RTA (Roads and Transport Authority) உலகின் மிகப்பெரிய தானியங்கும் ரயில் சேவையினை நகரத்தின் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களினால் Dubai Metro Cityயில் ஆரம்பித்துள்ளது.
30,000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டும், 15.3 பில்லியன் அமீரக திரஹம் செலவினாலும் நிர்மானிக்கப்பட்ட இதன் பணிகள் நான்கு வருடகாலத்திற்குள் கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது..
ஏற்கெனவே இதன் வெள்ளோட்டம் ஜெபல் அலி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக ஓடவிடப்பட்டுள்ளது.அதிநவீன தொழில்னுட்பத்தினால் இயங்கும் இந்த ரயில் சேவை டுபாய் நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக்குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தமாக 79 ரயில்கள் இரண்டு வரிசைகளில்(Tracks) ஓடவிருக்கின்றன.
சிகப்பு வரிசையில் 52.1 KM தூரத்திற்கு 62 ரயில்களும், பச்சை வரிசையில் 22.5KM தூரத்திற்கு 17 ரயில்களும் சேவையில் இயங்கும்.ஒவ்வொரு ரயிலிலும் Golden Class,Silver Class,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குமாக 3 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.


அதிநவீன வசதிகளுடன் கூடிய இருக்கைகளும்,நின்றவண்ணம் பயணிகும் பயணிகளுக்காக பாதுகாப்பான கைப்ப்டிகளும்,பயணிகளின் வசதிக்காக LCDதகவல் திரைகளும்,இண்டநெட் பாவனையாளர்களுக்காக (Wi-Fi) நெட் வசதியும் இதன் சிறப்பம்சமாகும்.


அமீரகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இதன் சேவை (9.9.9) நேற்றயதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் சில தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பொதுமக்கள் பயணிப்பதற்காக இன்று 10ம் திகதி முதல் விடப்பட்டது.

தூய்மையைப்பேணும் பொருட்டு ரயிலினுள் பயணிக்கும் பயணிகள் உணவு உட்கொள்வதும்,பானம் அருந்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. 54 சதவீத பயணிகளின் ஆதரவைப்பெற்று இச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. தடையை மீறினால் 100அமீரக திரஹம்கள் அபராதம் விதிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

  1. தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கின்றேன் -பதிவையும் அழைப்பையும் இங்கே காண்க - http://nkashokbharan.blogspot.com/2009/09/blog-post_25.html

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜுலை கலவரமும் நானும்

இலங்கை சென்றபோது!

இலங்கைக்கு கிடைத்த பரிசு