மனதைக்கவர்ந்த சோரத
கேளிக்கையான வினோதமான நிகழ்ச்சிகளை காண்பதற்கு இன்று பல தொலைக்காட்சி நாடகங்கள் ,தொடர்கள், நிகழ்ச்சிகள் நாளாந்தம் வலம்வருகின்றன. இருப்பினும் எதைப் பார்ப்பது எதை தவிர்ப்பது என்பதை தெரிவு செய்வதற்கு கூட நேரம் போதாமல் நேரத்தை ஆக்கரமித்துக்கொண்டு இருக்கின்றது இன்றைய எமது நாளாந்த அட்டவணை. இருந்தபோதும் சமுதாயத்திற்கு பல நல்ல விசயங்களை சொல்ல வேண்டும் என்கிற எண்ணக்கருத்துக்களோடு சில சிந்தனையாளர்கள் தங்கள் ஆக்க பூர்வமான படைப்புக்களையும் கலைத்திறமைகளையு ம், வெளிக்கொணர முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கென தனியான தொலைக்காட்சி நிலையங்கள் இல்லாத காலகட்டங்களில் அரச தொலைக்காட்சி நிலையங்களினால் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் அருமந்தமாக இருந்த தருணங்களும் உண்டு. ஆனால் தற்பொழுது நிலைமைகள் சற்று மாறி கைவிரல் நுனியில் வேண்டிய தமிழ் தொலைக்காட்சிகளை 24 மணித்தியாலமும் பல தரப்பட்ட தெரிவுகளுடன் கண்டுகளிக்கும் வசதிகள் உண்டு. இது இப்படியிருக்க சிங்கள நாடகங்களினதும் சினிமாக்களினதும் தரம் சற்றும் குறையாமல் மென்மேலும் மெருகேறிக்கொண்டு ப...