இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள்!

படம்
முன்பெல்லாம் புத்தகங்களை வாசிப்ப்தில் எனது பொழுதுகள் கழியும். ஆனால் இப்போதெல்லாம் முகப்புத்தகத்திலேயே எனது பொழுதுகள் மூழ்கிக்கிடக்கின்றது.  Face book த்தான் முகப்புத்தகமென்று குறிப்பிட்டேன். Facebook ற்க்கு தமிழாக்கத்தை கொடுத்த பெருமையும்,உரிமையும் எனக்குத்தான் என்பதில் ஒரு பெருமிதம். இதனை நண்பர் கோமஸ் அண்ணா ஆமோதிக்கின்றார். இந்த புத்தகத்திற்குள் எப்போது நான் மூழ்கினேன் என்பது எனக்கே தெரியாது. இதைக்குறித்து பதிவு எழுதவேண்டுமென்று நினைத்திருந்த போதே நினைத்த பல காரியங்களை பதிவர் சினேகிதி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். இது எனக்கு மட்டுமல்ல பலரது பொழுதுகள் Facebook ஆரம்பித்துFacebook இல் தான் முடிகிறது என்று குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இன்றைய காலக்கட்டத்தில் பல சமூகத்தொடர்பு தளங்கள் உலாவந்தாலும் முகப்புத்தகம் அதன் வாசகர்களிடத்தில் நல்ல பெயறெடுத்துள்ளது எனலாம். வெறுமனே நம்முடைய படங்களை வெளியிட்டு நண்பர்களின் ஆல்பத்தையும் பார்வையிடுவதற்குமட்டுமல்லாது,எங்கோவிருக்கும் நம் பால்ய சினேகிதர்களை ஒருங்கிணைக்கும் அற்புத தளமாக செயல்படுகிறது . . Facebook இன் வரலாற்றினை பார்ப்போமேயானா...