இடுகைகள்

செப்டம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டுபாயில் chikkupukku

படம்
டுபாய்வாழ் மக்களுக்கோர் அரியசெய்தி! அதாவது டுபாய் RTA (Roads and Transport Authority) உலகின் மிகப்பெரிய தானியங்கும் ரயில் சேவையினை நகரத்தின் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களினால் Dubai Metro Cityயில் ஆரம்பித்துள்ளது. 30,000க்கும் மேற்பட்ட பணியாளர்களைக்கொண்டும், 15.3 பில்லியன் அமீரக திரஹம் செலவினாலும் நிர்மானிக்கப்பட்ட இதன் பணிகள் நான்கு வருடகாலத்திற்குள் கச்சிதமாக முடிக்கப்பட்டுள்ளது.. ஏற்கெனவே இதன் வெள்ளோட்டம் ஜெபல் அலி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக ஓடவிடப்பட்டுள்ளது.அதிநவீன தொழில்னுட்பத்தினால் இயங்கும் இந்த ரயில் சேவை டுபாய் நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக்குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தமாக 79 ரயில்கள் இரண்டு வரிசைகளில்(Tracks) ஓடவிருக்கின்றன. சிகப்பு வரிசையில் 52.1 KM தூரத்திற்கு 62 ரயில்களும், பச்சை வரிசையில் 22.5KM தூரத்திற்கு 17 ரயில்களும் சேவையில் இயங்கும்.ஒவ்வொரு ரயிலிலும் Golden Class,Silver Class,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குமாக 3 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கூடிய இருக்கைகளும்,நின்றவண்ணம் பயணிகும் பயணிகளுக்காக பாதுகாப்பான கைப்ப்டிக...